பொதுமறைப் புலவர் – கு.சச்சிதானந்தம்

                                 

வாழ்வின் நெறி ஒவ்வொன்றையும்
ஏழு பருக்கையினுள்ளடக்கி
இருவரிகளில் வடித்துப் பத்தாக்கி
ஓர் அதிகாரம் என்று
நூற்று முப்பத்து மூன்றில் 
முப்பால் கலந்து ஐம்புலனடக்கும்
வாழ்வியல் வித்தைதனை 
அமுதினும் இனிய தமிழில்
திருக்குறள் எனும்
விருந்து படைத்த தெய்வப்புலவோன்
நம் வள்ளுவன்!

Leave a Reply

Categories