மறதி என்னும் மாத்திரை – கௌசல்யா ஞானேஸ்வரன்

உள்ளத்தின் 
ரணங்கள்
உள்ளுக்குள்ளே 
புதைக்கப்பட்டு 
ஆறாத் தழும்புகளாய்த் 
ததும்ப
விதியென்று
விடியல் பாராது 
வீட்டுக்குள்ளே முடங்க
உணர்ச்சிகள் 
உயிரோட்டம் இன்றி 
உருவம் வாட
மறதி மட்டுமே 
மாத்திரையாகி 
தோன்றிய சோகம் 
சொல்லாமல் போக
மொட்டு விட்ட
ஆசையெல்லாம் 
மெல்ல வந்து 
எட்டிப் பார்த்து
மலர்ந்து சிரிக்க 
மனம் மத்தளம் கொட்டி 
மத்தாப்பாய் 
ஜொலி ஜொலிக்கும்….!

Leave a Reply

Categories