
ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்தும் படைப்புத்திறன் போட்டி “படம் சொல்லும் கதை”. கீழே கொடுத்துள்ள 3 படங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குத் தகுந்த கட்டுரை/கவிதை/சிறுகதை ஒன்றை உங்கள் கற்பனையில் செதுக்கி தமிழ்முற்றத்திற்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு முதற்பரிசாக ரூ.1000ம் , இரண்டாம் பரிசு x 2: ரூ 500 ம் வழங்கப்படும் .
போட்டி விதிமுறைகள்:
1. வாசல் உறுப்பினர்கள் மட்டும் இந்தப் போட்டியில் பங்குபெறலாம்.
2. நீங்கள் அனுப்பப் போவது புதிய முயற்சியாக இருக்க வேண்டும் – FB , போன்ற சமூக தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கக்கூடாது.
3. ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பலாம்.
4. அனுப்ப வேண்டிய முகவரி : erodevaasal@gmail.com , மின்னஞ்சல் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30-06-2026.
5. போட்டியின் முடிவுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும்.
6. கட்டுரை மற்றும் சிறுகதை – 1000-1500 சொற்கள், கவிதை- குறைந்தது 20 வரிகள் இருக்க வேண்டும்.
எப்போதும் புதிய விஷயங்களை முயற்சி செய்தும் கற்றுக்கொண்டும் இருக்கும் ஈரோடு வாசலில், எழுதுவதை செதுக்கும் முயற்சியாக நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் வேண்டி….
– தமிழ்முற்றம்

