தமிழ்முற்றம் – “படம் சொல்லும் கதை” போட்டி முடிவுகள்

ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் நடத்திய “படம் சொல்லும் கதை” போட்டியில் பங்கேற்ற  வாசல் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வழங்கப்பட்ட 3 படங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்குத் தகுந்த வகையில் நீங்கள் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானதாக இருந்தது.

மிகவும் கவனமாக வாசிக்கப்பட்டு, சிறந்த படைப்புகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டி முடிவுகள் இதோ:

🏆 முதற்பரிசு: ரூபாய் 1,000

   காதர் – தனது சிறந்த சிறுகதையான  “தண்டிகாரர்” படைப்பிற்காக முதற்பரிசை வெல்கிறார்.

🥈 இரண்டாம் பரிசுகள்: தலா ரூபாய் 500

  1. முத்தரசு – தனது உணர்வுப்பூர்வமான “புன்னகை” என்ற கவிதைக்காக இப் பரிசினைப் பெறுகிறார்.
  2. ஆனந்தி ஆரூரன் – சமகாலப் பின்னணியை விவரிக்கும் அவரது “பாரம்பரியக் கைத்தறியும், பாஸ்ட் பேஷன் உருவாக்கும் சவால்களும்” என்ற சிறந்த கட்டுரைக்காக இப்பரிசினைப் பெறுகிறார்.

தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, தங்களின் மிகச்சிறந்த படைப்புகளை அனுப்பி இப்போட்டியைச் சிறப்பித்த அனைத்துப் படைப்பாளர்களுக்கும் எங்களது பாராட்டுகள். பங்கேற்றவர்களின் பட்டியல்:

  1. முத்தரசு
  2. ஆனந்தி ஆரூரன்
  3. ஜனார்த்தன சேனாபதி
  4. காதர்
  5. சச்சிதாநந்தம் 
  6. சிவகாமி இரவிச்சந்தர்
  7. பி. சாந்தி
  8. சரஸ்வதி
  9. அன்புமணி
  10. கௌசல்யா ஞானேஸ்வரன்

பங்கேற்ற 10 படைப்புகளும் நாளை முதல் ஒவ்வொன்றாகத் தமிழ்முற்றம் மின்னிதழில் வெளியாகும்.

Leave a Reply

Categories